உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, August 06, 2009

கம்ப்யூட்டருக்குப் பன்றிக் காய்ச்சல்!

திருஷ்டி பட்டுவிட்டது போலிருக்கிறது... தொடர்ந்து என் பிளாகுகளில் பதிவிட முடியாமல், என் சிஸ்டத்தில் பன்றிக் காய்ச்சல் பற்றிவிட்டது. வைரஸ் தொற்றிவிட்டது. ஜன்னலைத் திறந்தாலே WARNING என்று அலறுகிறது. எந்த ஆன்ட்டி வைரஸ் மருந்து கொடுத்தாலும் ஜுரம் விடுவதாயில்லை.

லினக்சும் இருக்கிறது. ஆனால், அதில் தமிழ் எழுத்துக்கள், ஆதி கால கல்வெட்டுத் தமிழ் போலப் படிக்கவே முடியாமல் இருக்கிறது.

என் (சிஸ்டத்துக்கான) குடும்ப டாக்டரான என் தம்பி, வரும் ஞாயிறு அன்று வந்து சிஸ்டத்துக்கு சிகிச்சை செய்வதாய்ச் சொல்லியிருக்கிறார்.

அதுவரை பொறுத்தருள்க.

அலுவலக சிஸ்டத்தில் பிளாக் எழுத விரும்பவில்லை. மற்றவர்களைச் செய்யாதே என்று தடுக்கிற நானே அந்தத் தவற்றைச் செய்யலாமா? விளக்கத்துக்காக இந்தப் பதிவை மட்டும் அலுவலகத்தில் வைத்துப் பதிகிறேன்.

என் சிஸ்டத்தின் ஜுரம் தணியப் பிரார்த்தியுங்கள்.

6 comments:

இது மற்ற பிளாக்குகளுக்கு முழுவதும் பரவிடாமல் இருக்கவும் உங்கள் கம்யூட்டர் விரைவில் பூரண குணமடையவும் பில் கேட்ஸானந்தா சுவாமிஜியை பிரார்திக்கிறேன்.


ஜெய் போலோ.. கேட்ஸானந்தா.
 
/
என் சிஸ்டத்தின் ஜுரம் தணியப் பிரார்த்தியுங்கள்.
/
:))
 
உங்கள் கணினி விரைவில் நலம் பெறட்டும்!

நீங்கள் லினக்ஸ் என்ன வெர்ஷன் வைத்துள்ளீர்கள் என்று தெரியாது. மாடர்ன் லினக்ஸ் OS எல்லாமே அழகாக தமிழ் காட்டுகின்றன. என்னிடம் லினக்ஸ் மற்றும் மேக் உள்ளது. தமிழ் படிப்பதிலோ, உள்ளிடுவதிலோ பிரச்னை இல்லை.
 
சத்யராஜ்குமார்
விரைவில் சரி செய்து வழக்கம் போல எழுதுங்க ரவி சார். :)
 
siikirama unga computeroda health condition pathi sollunga
 
* வண்ணத்துப்பூச்சி! உங்கள் பிரார்த்தனையாலும், பில்கேட்ஸானந்தா சுவாமிஜியின் அருளாசியாலும் என் கம்ப்யூட்டரின் வைரஸ் காய்ச்சல் விட்டுவிட்டது. நன்றி!

* :-( இப்படி இருந்த நான் :-) இப்படி ஆகிட்டேன். நன்றி மங்களூர் சிவா!

* மேக், ஆப்பிள் கம்ப்யூட்டரில் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்கிறேன். சரியா சத்யராஜ்குமார்?

* ஹாய் சஞ்சய்காந்தி! புதுமுகம் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன். அண்ணா ராஜீவ்காந்தி நலமா? :-)

* முல்லை! நீங்க திருவா, திருமதியா, செல்வியா என்று புரியாமல் மையமாக வெறுமே முல்லை என்று மட்டுமே விளித்துள்ளேன். வருக, வருக! காய்ச்சல் விட்டு, அடுத்த பதிவையும் போட்டுவிட்டேன், பார்த்தீர்களா?