உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, February 12, 2012

பரிசு: பொன்னியின் செல்வன் - 5 பாகங்கள்!







‘காதலர்தின’த்தை முன்னிட்டு இங்கே ஒரு சிறப்புக் கட்டுரையைப் பதிந்துள்ளேன். இதை எழுதியது நான் இல்லை. ஒரு முக்கியப் பிரமுகர் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை இது. இதை முழுக்கப் படியுங்கள். இந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்பதைச் சரியாக யூகித்து முதலில் பின்னூட்டம் இடும் வாசகருக்கு ரூ.1350 மதிப்புள்ள, அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ (ஐந்து பாகங்கள்) விகடன் பிரசுரம் புத்தகம் பரிசு!


காதலும் கல்யாணமும்!

“வழுக்கைத் தலை; இருக்கும் நாலைந்து மயிரும் வெளுப்பு. உமக்கென்ன தெரியும் காதலைப் பற்றி? தயவுசெய்து வேறு விஷயம் பேசும். பழைய அனுபவம் பேசப் போகிறீரா? போதும், போதும். நிறுத்தும்! 25 வருஷங்களுக்கு முன் நடந்த சங்கதிகள் என்ன நினைவு இருக்கப் போகிறது? நீர் அக்காலத்தில் காதல் என்ன கண்டீர்? கர்னாடகத்தில் மூழ்கின நாட்கள். உம்மைக் கேட்டு நான் கற்றுக் கொள்ளவா?”

இவ்வாறெல்லாம் வாசகர்கள், அதிலும் பட்டணக்கரை வாலிபர்களும் யுவதிகளும் கேட்டுச் சிரிப்பது என் காதில் படுகிறது. பிறர் நினைப்பதையெல்லாம் என் காதில் சொல்லும் ஒரு யந்திரம் என்னிடம் உண்டு. அதனால் எனக்குக் கஷ்டமேயொழிய சௌகரியம் ஒன்றுமில்லை. ஆகையால்தான் பிறர் போல் பிரசங்கங்கள் செய்யவும் கட்டுரைகள் எழுதவும் முடியவில்லை. எவ்வாறாயினும் இன்று விவாகம், காதல் இவ்விஷயங்களைக் குறித்து எழுதுவதென்று தீர்மானம்.

காதல் என்பது கடினமான விஷயம். ஆனால், விவாகம் என்பதைப் பற்றியாவது யுவர்களுடன் சில பேச்சுக்கள் பேசலாம் என்று உத்தேசம். டிக்கெட்டு வாங்கித்தான் ரயில் ஏறவேண்டும். கூட்டத்தில் புகுந்து ரயிலில் ஏறவோ, ஜன்னலில் டிக்கெட்டு வாங்கவோ என்னால் முடியாது. ஆயினும், இந்த ஊருக்கு இந்த ரயில் ஏற வேண்டும், வண்டியில் ஏறின பின்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றி நான் கொஞ்சம் சொல்லலாம் அல்லவா?

காதலின் கஷ்டம்!

ஆராய்ந்து பார்த்தால், நம் நாட்டில் சரியான காதலுக்கு விளை பூமி இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. ஏனெனில், இந்நாளிலும்கூட தினசரி வாழ்வில் இங்கே ஆண் பெண் தாராளமாகக் கலந்து பழகுவது கிடையாது. என்ன சமாதானம் சொன்னபோதிலும் இது உண்மை உண்மையே! இது நல்லதா, கெடுதலா என்பது வேறு பிரச்னை.

இரண்டாவதாக, நம்முடைய சமூகத்தில் பிறந்த பெண்களுக்கெல்லாம் விவாகம் செய்து தீரவேண்டும். காதல் எனும் நிபந்தனை வைத்துக்கொண்டால் இது முடியாத காரியமாகும். இது பெண்ணைப் பெற்றவர்களுக்கு எளிதில் விளங்கும்.

மூன்றாவதாக, - இது எல்லா நாடுகளுக்கும் பொது - காதல் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டிய மனோநிலை. ஒருவன் ஒருத்தி பேரில் காதல் கொள்ளலாம். அதற்கு ஏற்றாப்போல் அவளுக்கு அவன் பால் காதல் உண்டாவதில்லை. காதலைத் தூண்டும் உருவமும், குணங்களும், செயல்களும் ஒருத்தி அல்லது ஒருவன் படைத்திருப்பின், இந்தப் பைத்தியக்காரப் போட்டி உலகத்தில் பல பேர் அந்த ஒருத்தியையோ அல்லது ஒருவனையோ காதலிக்க முற்படுகிறார்கள். இதற்கு என்ன செய்வது? காமதேவன் நம்முடைய சௌகரியங்களை உத்தேசித்து ஆண், பெண்களைத் தனித்தனி ஜோடிகளாகப் பிரித்துத் தன் பாணங்களை எறிவதில்லை. எல்லாரும் காதல் மணம்தான் செய்ய வேண்டும் என்ற நியதி ஏற்படுத்திக் கொண்டோமானால், பெருங் கலகங்களுக்குத்தான் காரணமாகும். பல பேர் விவாகம் இல்லாமலேயே இருக்க நேரும். ஆகையால், காதல் நிபந்தனை முடியாத காரியம் என்பது விளங்கும்.

மின்னலும் மழையும்!

இதனால், காதல் என்பது ஒரு கனவு என்றல்ல; வாழ்க்கையில் நிறைவேறவே முடியாதது என்றல்ல. காதல் என்பது ஓர் உண்மையான வேகம்; சந்தேகம் இல்லை. சில சமயம் இரு புறமும் காதல் உண்டாகி, விவாகமும் முடிவு பெறுகிறது. மின்னலைக் காண்கிறோம்; அது உண்மையான வேகம். அழகான காட்சி! ஆயினும், மின்னல் மின்னினால்தான் மழை என்ற நியதி கிடையாது. மின்னல் தானாக உண்டாகும். உண்டானால் அழகுதான். ஆனால், மின்னல் இருப்பினும் இல்லையாயினும் மேகங்கள் கூடி மழை பெய்கின்றன. பெய்வதால்தான் வாழ்வு!

விவாகம் செய்துகொண்ட தம்பதிகள் ஒருவரை ஒருவர் மதிக்கவும், நேசிக்கவும், கூட்டாளிகளாக வாழ்க்கை நடத்தவும் பயில வேண்டும். காதல் இல்லை; தாய், தகப்பனார் செய்வித்த மணம்; இது உப்பில்லாச் சோறு என்று ஏங்கி, ஊக்கமில்லாத வாழ்க்கையாகச் செய்துகொள்ள வேண்டாம். பிற நாடுகளில் எவ்வளவோ காதலைக் கதைகளில் படிக்கிறோம்; சினிமாக்களில் பார்க்கிறோம். அதுவல்லவோ உண்மையான வாழ்வு என்று ஏக்கம் அடைந்து ஏமாற வேண்டாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நம் நாட்டிலும் ஆண் பெண் கூடி உயர்வும், அழகும் பொருந்திய வாழ்வு நடத்தலாம்.

வியக்கத்தக்க தைரியம்!

வாலிபனே, உனக்கு ஓர் இளம் மனைவி வீட்டுக்கு வந்திருக்கிறாளா? நீ எப்போதாவது ஆழ்ந்து சிந்தித்ததுண்டா? சிறு வயதில் பெண் தன் தாய், தகப்பனை விட்டுவிட்டுப் புதிய ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு தைரியமாக, எவ்வளவு சந்தோஷமாக வருகிறாள்! அவள் எதை நம்பி, யாரை நம்பி, இவ்வளவு தைரியமும் சந்தோஷமும் முக மலர்ச்சியும் கொண்டிருக்கிறாள்? மணம் புரிந்த ஒவ்வொரு வாலிபனும் இதைத் தனக்குள் யோசித்து வியப்புற வேண்டும். இதைப் போன்ற தைரியத்தையும் திட புத்தியையும் ஆண்களில் யாராவது காட்டியிருக்கிறீர்களா? காட்ட முடியுமா? இவ்வாறு இளம் மனைவியின் ஆத்ம சக்தியையும் தைரியத்தையும் கண்ட பிறகு, அவள்பால் செய்ய வேண்டிய தன் கடமையை ஒவ்வொரு வாலிபனும் உணர்வான். தன் உடல் இன்பத்திற்காக அடைந்த ஒரு கருவியாக அவளை நினைக்க மாட்டான். தன்னை நேசித்த ஒரு நல்ல சிநேகிதியிடம் நடந்துகொள்வது போல் மனைவியிடம் கவனிப்பும் மதிப்பும் சிரத்தையும் காட்டி நடந்து கொள்வான். தான் இட்டதே சட்டமாக வைக்க மாட்டான். தான் எஜமானன், அவள் தொண்டு செய்பவள் என்று எண்ண மாட்டான்.

தோழமைப் பயிற்சி!

கேவலம், உடல் இன்பத்தை லட்சியமாக எண்ணக் கூடாது. இதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், மறந்து விடுகிறார்கள். இந்த உடல் மகிழ்ச்சியைத் தம்பதிகள் ஜாக்கிரதையாக ஆண்டு, அது தமக்குள் நட்பு வளர்க்கக் கடவுளால் படைக்கப்பட்ட ஓர் அருமையான கருவி என்று அறிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆனால், சேர்ந்து வாழ்வதன் பயனே அதுதான் என்று கருதுதல் கூடாது. அது நட்பை வளர்த்து, ஒற்றுமையைப் பூரணமாக்க ஓர் அற்புதமான சக்தி. அது அறிவில்லாதாருக்கும், அறிவு படைத்தோருக்கும் உதவும் ஒரு மேன்மையான கருவி; சாதனம்! அதை மறந்து, அதுவே இன்பம் என்று எண்ணிவிடக் கூடாது.

எவ்வளவோ காலத்திற்கு முன் நமது திருவள்ளுவர், மனைவிக்கு ‘வாழ்க்கைத் துணை’ என்ற அரும் பெயரிட்டு எழுதினார். புருஷனும் மனைவியும் தோழமை பயில வேண்டும். எந்த விஷயத்தையும் இருவரும் கலந்து பேசி முடிக்க வேண்டும். வீட்டு விஷயங்களில் மனைவியின் இஷ்டப்படி விட்டுவிடுதல், உலக விவகாரங்களில் புருஷன் இஷ்டப்படி நடத்தல் என்றெல்லாம் பங்கு போட்டுக் கொள்ள வேண்டாம்.

காதல் ஜுரமன்று; விவாகம் மருந்தன்று!

காதல் கண்டு கூடிய தம்பதிகளானால் மிகவும் நல்லது; கடவுள் படைத்த இருவர், ‘நாம் சேர்ந்து இல்லற வாழ்க்கை நடத்துவோம்’ என்று, காதலின் வேகமின்றி சாதாரணமாய்க் கூடினவர்கள் ஆனாலும் சரி, அவ்வாறு வாழ்ந்து உலகத்தில் அன்பு எனும் செல்வத்தைப் பெருக்கலாம். காதல் என்பது ஜுரமாகவும், விவாகம் என்பது அதற்கு ஒரு மருந்தாகவும் எண்ணக் கூடாது. இது சுத்த மோசம். காதல் என்பது பூவின் மணம் போல் ஓர் இயற்கைச் சக்தி! ஆறாத சக்தி. சில சமயம் அது தானாகப் பொங்கும். இல்லாவிடில் மின்சார சக்தியைப் போல் நாமே உண்டாக்கிக் கொள்ளலாம்.

காதலும் காத்தலும்!

காதலை முதலிலே காண்பது பெரிதல்ல; கண்டோம் என்று நினைத்தனவெல்லாம் உண்மைக் காதல் அல்ல! தேகத்தில் உள்ள பூதத் தொகுதிகள் தங்கள் அன்னகோச வேகத்தை எல்லாம் உயர்ந்த காதலாகக் காட்டிக் கொள்ளும். பகுத்தறிவுடன் பொய்யைத் தள்ளி, உண்மைக் காதலை ஒருவன் கண்டறிந்தாலும், விரும்பினவளிடம் அதற்கொத்த காதல் உண்டாகாமல் இருப்பதையும் காண்கிறோம். இரு பக்கமும் இயல்பாகவும், பலாத்காரம் அற்றதாகவும் காதல் உண்டானால் அல்லவோ, வாழ்வுக்கு அது தாங்கு மேடையாகும்? இந்தப் பெரும் பேறு அனைவரும் பெறுதல் அரிது! ஆனால், தன் பாய்ச்சல் இல்லாத வயல்களை எல்லாம் தண்ணீர் ஓடவில்லை என்று விட்டுவிட முடியுமா? கிணறு வெட்டியோ, வானத்தை வேண்டியோ சாகுபடி செய்கிறோம். இவ்வாறு உழுது பயிர் செய்து, இனிய காய் கனி கிழங்குகளும், மணமும் அழகும் கொண்ட பூக்களும் உண்டாக்கலாம். கண்ட காதலைக் காத்தலும், சர்வ வியாபகமாய் மறைந்து கிடக்கும் அவ்வியக்கத்தக்க காதல் செல்வத்தை வெளிப்படுத்தி வளர்த்து மனைவியை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளப் பயில்வதும்தான் யுவனுடைய தருமம். காதல் என்பது சாதல். நான் என்பது சாக வேண்டும். ‘காதல் இன்றேல் சாதல்’ என்று பாரதியார் குயில் பாடிற்று.

காதல் யுத்தம்!

விவாகத்துடன் காரியம் முடிந்தது என்று எண்ணுவது அறியாமை. மணம் செய்த பின்புதான் குருக்ஷேத்திரம். வாழ்க்கை முழுதும் ஒரு யுத்த களம். மனத் தூய்மைக்குப் பல சோதனைகள் நேரிடும். கொண்ட மனைவியைத் தாழ்த்தும் பல எண்ணங்களும் தோன்றும். அவைகளைக் கவசம் பூண்டு அருச்சுனனைப் போல் வில்லெடுத்து வெல்ல வேண்டும். காதல் மணம் ஆயினும் சரி, வழக்க மணம் ஆயினும் சரி, யுத்தம் பின்னால்தான். அதில் வென்றாலொழிய வெற்றி இல்லை; சுகமும் இல்லை.

உண்மையில், பூதத் தொகுதிகள் அனைத்தும் ஒன்று. அதில் ஆண் முழுதும் ஒன்று; பெண் முழுதும் ஒன்று. அனைத்தும் ஒன்றுபட்டுஅத்வைதமாக இடைவிடாமல் பொங்குகிறது. அதுவே காதல் சக்தி. ஆனால், இந்தச் சக்திக்கு வரம்பு மீறி இடம் கொடுத்தோமானால், அனைத்தும் ஒன்றாக வெந்து சாம்பலாகும். அவ்வளவு நெருப்பைத் தாங்க மாட்டோம். தனி அடுப்பும் விளக்கும்தான் வாழ்க்கை. ஆகையால், அடுப்பை மூட்டி, விளக்கை ஏற்றிக் காத்து வாழ்வோமாக!

*****

என்ன, படித்துவிட்டீர்களா? இதை எழுதிய கட்டுரையாசிரியர் யார் என்பதை யூகித்து, உடனே பின்னூட்டம் இடுங்கள். சரியான விடையை முதலில் பின்னூட்டம் இடுபவருக்குப் பரிசு! இது கொஞ்சம் கஷ்டமான போட்டி என்று நான் நினைப்பதால், உங்கள் விடைகள் வந்து சேர வேண்டிய முடிவு தேதியை இம்மாதம் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை என நிர்ணயித்திருக்கிறேன்.

ஒருவரே எத்தனைப் பெயர்களை வேண்டுமானாலும் யூகித்துப் பின்னூட்டங்கள் இடலாம். ஆனால், ஒரு பின்னூட்டத்தில் ஒரே ஒரு பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்கும் பின்னூட்டங்கள் (அவற்றில் சரியான விடையும் இருந்தபோதிலும்) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

இந்த ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவில், குறிப்பிட்ட இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் மட்டும்தான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’க்கோ அல்லது இதே வலைப்பூவில் தவறுதலாக வேறு ஒரு பதிவுக்கோ அனுப்பப்படும் விடைகளும், எனது ஃபேஸ்புக், டிவிட்டர், ஈமெயில் போன்றவற்றுக்கு அனுப்பப்படும் விடைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

தொழில்நுட்பக் கோளாறு, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உங்கள் பின்னூட்டங்கள் ஒருவேளை எனக்குக் கிடைக்காமல் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல!

இந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விடையும், போட்டி முடிவும் இம்மாதம் 27-ம் தேதி இதே வலைப்பூவில் பதிவேற்றப்படும்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு, வெற்றியும் பெற்ற ஒரு சிலர், பின்பு அது பற்றி மறந்து போனதன் காரணமாகவோ, அல்லது தனக்கு எங்கே பரிசு கிடைக்கப் போகிறது என்கிற எண்ணத்தினாலோ தங்கள் முகவரியைப் பல நேரங்களில் எனக்கு அனுப்புவதில்லை. வெற்றி பெற்ற வாசகருக்கு உரிய புத்தகத்தை அனுப்பி வைக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.

எனவே, அவசியம் இம்மாதம் பிப்ரவரி 27-ம் தேதியன்று இதே வலைப்பூவில் போட்டி முடிவைப் பாருங்கள். இந்திய முகவரிக்கு மட்டுமே புத்தகப் பரிசை அனுப்பி வைக்க இயலும். நீங்கள்தான் வெற்றியாளர் என்றால், உடனே உங்கள் முழு இந்திய முகவரியை (பின்கோடு எண்ணுடன்) என் nraviprakash@gmail.com இ-மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் முகவரியை அனுப்பக் கடைசி தேதி மார்ச் 15. அதற்குள் உங்கள் முகவரி எனக்குக் கிடைத்தால் மட்டுமே புத்தகப் பரிசை அனுப்பி வைக்க இயலும். மார்ச் 15-க்குப் பின்பு உங்கள் முகவரியை அனுப்பிப் பயனில்லை.
.

100 comments:

Kalki
 
Kalki
 
Kalki
 
சாவி அவர்கள்
 
ராஜாஜி!
 
பெரியார்
 
கிருபானந்த வாரியார் ;--)
 
சாண்டில்யன்..

Regards,
Baranee,
Bangalore
 
திரு.வி.க!!!!

Regards,
Baranee,
Bangalore
 
அமரர் கல்கி
 
ராஜாஜி!
 
தேவன்.
 
kalki
 
PuthumaiPithan
 
Jeyakanthan
 
JeyaMohan
 
KE VA JA
 
Saavi
 
அண்ணாதுரை
 
mu. ka
 
அவ்வை தி.க. சண்முகம்
 
கு.ப.ரா
 
Periyar
 
Sujatha
 
பம்மல் சம்பந்த முதலியார்
 
பரிதிமாற் கலைஞர்
 
முல்லை முத்தையா
 
மௌனி
 
வ.ரா.
 
லா.ச. ராமாமிர்தம்
 
விந்தன்
 
சோமாஸ்
 
அய்க்கண்
 
வண்ணதாசன்
 
Vana nalavan
 
Nanjil Nadan
 
Vikraman
 
Yes Ramakrishnan
 
அ. மாதவையா
 
அ.முத்துலிங்கம்
 
அசோகமித்திரன்
 
ஆ. மாதவன்
 
ஆதவன்
 
ஆத்மாநாம்
 
ஆர்.சூடாமணி
 
Indhra Parthasarathy
 
ஆர்.சூடாமணி
 
க.நா.சு
 
க.நா.சு
 
கல்யாண்ஜி
 
கி ராஜநாராயணன்
 
கு. அழகிரிசாமி
 
கு.ப.ரா
 
கோணங்கி
 
சுகுமாரன்
 
சுப்ரபாரதிமணியன்
 
Bharathiyar
 
தி. ஜானகிராமன்
 
தேவதச்சன்
 
தேவதேவன்
 
நகுலன்
 
பாவண்ணன்
 
மனுஷ்யபுத்திரன்
 
Cho
 
Thevan
 
Bhagirathan
 
VA VE Su Iyer
 
வல்லிக்கண்ணன்
 
Mu VAa
 
Te Ka Se
 
Ma Po CE
 
'KALKI' KRISHNAMOORTHI
 
"DEVAN"
 
Rajagopalachari (RAJAJI)
 
Rajagopalachari (RAJAJI)
 
Rajagopalachari (RAJAJI)
 
இந்தக் கட்டுரையை எழுதியவர் வேறு யார், நமது கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்கள்தான்.
 
thiru vi ka -- Ar
 
அசோக மித்திரன்
 
கடுகு அகஸ்தியன்
 
"RAJAJI"
 
கல்கிதான்
 
எம்.எஸ்.எம்
ராசகோபாலச்சாரியார்
 
Sir, I think it was written by Mr. சாவி sir
 
answer- kalki.
K.ANANDAN
B.PALLIPATTI(po)
PAPPIREDDIPATTI(TK)
DHARMAPURI(DT)-635301
 
EVR periyar
 
EVR periyar
 
கல்கி. என்ன சரியா?
 
சாவி. என்ன சரியா?
 
Dear Ravi

I think Kalki wrote this article.

Venkat
 
Barathiyar
 
Mu Va
 
Kalki
 
Devan
 
Arignar Anna
 
Rajaji
 
E. Ve. Ra
 
Saavi
 
answr - Thiru.Vi.Ka.
K.ANANDAN
 
Writer Saavi